தலைவாசல் அருகே கொத்தடிமையாக வேலை செய்த 35 வட மாநில பெண்கள் மீட்பு!

தலைவாசல் அருகே தனியார் நூல் மில்லில் கொத்தடிமையாக வேலை செய்த 35 வட மாநில பெண்கள் மீட்பு  எட்டு மணி நேர விசாரணைக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
தலைவாசல் அருகே கொத்தடிமையாக வேலை செய்த 35 வட மாநில பெண்கள் மீட்பு!

தலைவாசல் அருகே தனியார் நூல் மில்லில் கொத்தடிமையாக வேலை செய்த 35 வட மாநில பெண்கள் மீட்பு  எட்டு மணி நேர விசாரணைக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள  சார்வாய் கிராமத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான  அக்சென் டெக்ஸ் என்ற பெயரில் தனியார் நூல் மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் உள்ளூர் பணியாளர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் தின கூலி அடிப்படையில் ஆட்களை அழைத்து வந்து பணியில் வைத்து வேலை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்த மில்லில், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 35 பெண்கள் இங்குள்ள விடுதியில் தங்கி கடந்த நான்கு மாத காலமாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர்

இவர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு எண் 181 க்கு  போன் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் தன்னார்வலர்கள் அமைப்பு தலைவாசல் வட்டாட்சியர் வரதராஜன் மற்றும் வருவாய்த் துறையினரும் போலீசாரும் சம்பந்தப்பட்ட  நூல் மில்லிற்க்கு நேற்று இரவு 9 மணிக்கு சென்று விசாரணை செய்தனர் .

இந்த விசாரணையின் போது தங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் தினசரி 400 ரூபாயும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தருவதாக கூறி அழைத்து வந்ததாகவும், ஆனால் இங்கு அதுபோல் நிர்வாகம் தங்களுக்கு செய்து தரவில்லை என புகார் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சுமார் 8 மணிநேர விசாரணைக்கு பிறகு மில்லில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 35 பெண்களையும் வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பினரும்  மீட்டு சேலத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் அந்த 35 பெண் தொழிலாளிகளையும் சொந்த ஊரான ஒரிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தலைவாசல் போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com