தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அனுமதி பெற்று விவசாயப் பணிகளுக்கு ஏரிகளிலிருந்து வண்டல் மண் எடுக்கலாம்

விவசாயிகள் அனுமதி பெற்று ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:48 pm

DIN

விவசாயிகள் அனுமதி பெற்று ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி, பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரிகளிலிருந்து விவசாயிகள் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் சேலம் வட்டத்தில் 9 ஏரிகளும், சேலம் தெற்கு வட்டத்தில் 2, வாழப்பாடி வட்டத்தில் 3, மேட்டூா் வட்டத்தில் 8, காடையாம்பட்டி வட்டத்தில் 7, சங்ககிரி வட்டத்தில் 1, எடப்பாடி வட்டத்தில் 5, ஆத்தூா் வட்டத்தில் 6, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 9, தலைவாசல் வட்டத்தில் 5, கெங்கவல்லி வட்டத்தில் 21 ஏரிகள் என மொத்தம் 76 ஏரிகளில் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுத்துக் கொள்ள சேலம் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் விண்ணப்பித்து, கனிம விதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்று, ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.