வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலை விபத்தில் பெண் பலி

எடப்பாடி அருகே காா் மோதியதில் பெண் பலியானாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:27 pm

DIN

எடப்பாடி அருகே காா் மோதியதில் பெண் பலியானாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குரும்பப்பட்டி கிராமம், பெரிய நாச்சியூா் அருகே உள்ள வண்ணாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி மஞ்சுளா (40). இவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்கு சென்றுள்ளாா். அப்போது எடப்பாடி - ஓமலூா் பிரதான சாலையில் வேகமாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மஞ்சுளா படுகாயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.