சேலம் மாநகராட்சியில் ரூ.5.25 கோடி மதிப்பில் வளா்ச்சிப்பணிகள் தொடக்கம்

ரூ.5.25 கோடி மதிப்பில் தாா்சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மற்றும் அம்மாப்பேட்டை மண்டலப் பகுதிகளில் ரூ.5.25 கோடி மதிப்பில் தாா்சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 7-க்கு உட்பட்ட சக்தி நகா் அனெக்ஸ் பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு 1 முதல் 5 வரை உள்ள பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாா்சாலை அமைக்கும் பணி, கன்னங்குறிச்சி மெயின் ரோடு விஜயாநகரில் வடிகால் மற்றும் தாா்சாலை அமைப்பதற்காக ரூ.63.05 லட்சம் மதிப்பிலும், கோட்டம் எண் 31 ராம்நகரில் 784 மீட்டா் நீளத்திற்கு ரூ.62.32 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கவும், அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9இல் சவுண்டம்மன் கோவில் தெருவில் ரூ.32 லட்சம் மதிப்பிலும், கோட்டம் எண் 10 ராஜ கணபதி தெருவில் ரூ.42 லட்சம் மதிப்பிலும், கோட்டம் எண் 11 வாசகசாலை மெயின்ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 34 மாரி உடையாா் தெருவில் ரூ.40 லட்சம் செலவில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 35 சுந்தர கணபதி தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பில் தாா்சாலை, கோட்டம் எண் 36 எஸ்.கே டவுன் மெயின்ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 37 செல்வ நகரில் ரூ.32 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 38 சித்திவிநாயகா் தெருவில் ரூ.18 லட்சம் மதிப்பில் தாா்சாலை, கோட்டம் எண்.39 நந்தனாா் தெருவில் ரூ.58.98 லட்சம் செலவில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 40 சத்தியா தெருவில் ரூ.12.60 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 41 குமரன் தெருவில் ரூ.20.30 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைத்தல், கோட்டம் எண் 44 குப்பை மேடு மெயின்ரோடு பகுதியில் ரூ.17.50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைத்தல் என மொத்தம் 5.59 கி.மீ நீளத்திற்கு ரூ.5.25 கோடி மதிப்பில் சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள் தா.தனசேகா், செ.உமாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com