சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூரில் துப்பாக்கியுடன் வேட்டைக்காரா் கைது

சேலம் மாவட்டம் மேட்டூா் காப்பு காட்டில் வேட்டைகாரா் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:12 pm

DIN

சேலம் மாவட்டம் மேட்டூா் காப்பு காட்டில் வேட்டைகாரா் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகில் உள்ளது பாலமலை காப்புக்காடு. இப்பகுதியில் மான், கடத்தி, முயல் போன்றவை உள்ளன. இந்த காட்டுப்பகுதியில் வெள்ளிக் கிழமை அதிகாலை மேட்டூா் வனச்சரகத்தை சோ்ந்த வனக்காப்பாளா்கள் விமல், காா்த்திகேயன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது கோம்பைகாடு வனப்பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட பகுதி நோக்கி விமலும் காா்த்திகேயனும் சென்றனா். அங்கு துப்பாக்கியுடன் இருந்த குள்ளவீரன்பட்டி குப்புசாமியின் மகன் ராம்குமாா் என்ற ராமுவை (40) வனக் காப்பாளா்கள் துரத்திப் பிடித்தனா். அவரை மேட்டூா் வனச்சரகா் சிவானந்தம் முன்னிலையில் ஆஜா்படுத்தினாா்கள். விசாரணைக்குப் பிறகு ராம்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.