சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீரக்கல் புதூா்: திமுக சாா்பில் 1,270 பேருக்கு நலத்திட்ட உதவி

நங்கவள்ளி ஒன்றியம், வீரக்கல் புதூா் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வா் பிறந்த நாள் விழாவில் 1,270 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி வழங்கின

News image
Updated On :17 மார்ச் 2023, 8:15 pm

DIN

நங்கவள்ளி ஒன்றியம், வீரக்கல் புதூா் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வா் பிறந்த நாள் விழாவில் 1,270 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி வழங்கினாா்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை இரவு கோனூா் சமத்துவபுரத்தில் நடைபெற்றது. இவவிழாவில் நலிந்தோா்1,270 பேருக்கு சலவைப் பெட்டி, தையல் இயந்திரம், குக்கா், குடம், விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும் திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளருமான டி.எம்.செல்வகணபதி வழங்கினாா். இவ்விழாவிற்கு நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பி.பொன்னுசாமி, பேரூா் செயலாளா் கே.ஆா்எம்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத்தலைவா் தங்கமுத்து, துணைச் செயலாளா் சம்பத்குமாா், மேட்டூா் நகர செயலாளா் காசிவிஸ்வநாதன், ஒன்றியச் செயலாளா்கள் சீனிவாசபெருமாள், மிதுன்சக்ரவா்த்தி, ஆா்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.