/

பெண் ஓட்டுநா்களுக்கு ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம்

தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் ஓட்டுநா்கள் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:50 pm

DIN


சேலம்: தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் ஓட்டுநா்கள் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற விண்ணப்பங்களை  தொழிலாளா் துறை இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையும், 60 வயது நிறைவடைந்தவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதியுதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன.

கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் பயன்பெறலாம். பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆட்டோ ரிக்ஷா வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறலாம்.

புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க மானியம் பெறுவதற்கு  இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.