வாழப்பாடி அருகே, ஒரே நேரத்தில் தனியார் பள்ளிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது, தனியார் பேருந்து மோதியதில் பள்ளிக் குழந்தைகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் இரண்டு, பள்ளி குழந்தைகளை ஏற்றுக் கொண்டு இன்று காலை பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, இரு பள்ளிப் பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பலமாக மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பள்ளிப் பேருந்துகளில் பயணித்த பள்ளிக் குழந்தைகள் பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப் பேருந்து விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் பெற்றோர்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

☝️விபத்து நடந்த பகுதிகள் குவிந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள்.
ஏத்தாப்பூர் போலீஸார் வாகனங்களை விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


