தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேட்டூர்: மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளை

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர்  ஏழுபரணை காட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து தங்கநகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 9:15 am

DIN

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர்  ஏழுபரணை காட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து தங்கநகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர்  ஏழுபரணை காட்டை சேர்ந்தவர் ராமசாமி (70), விவசாயி, இவரது மனைவி அத்தாயம்மாள்(65). இவர்களுக்கு மல்லிகா (45) என்ற மகளும் பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

நேற்று இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் அத்தாயம்மாள்(65) உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உள்ள கொட்டகையில் ராமசாமி உறங்கிக் கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை அத்தாயம்மாள் கட்டிலில் படுத்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் தங்க நகை, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரொக்க பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடய அறிவியல் நிபுணர்கள் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொளத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான அத்தாயம்மாள் மகன் பிரபாகரனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கவிதா கள்ளக்காதலனுடன் சென்று விட்டதால் பிரபாகரன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவி தங்கமணியும் பிரபாகரனும் ஏற்கனவே தனது பெற்றோர்களை மிரட்டி சொத்துக்களை விற்று ரூ 26,00,000 லட்சத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் உள்ள சொத்துகளை விற்று தங்களுக்குபணம் தர வேண்டும் என்று தங்கமணியும் பிரபாகரனும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

இதனால் போலீசாருக்கு பிரபாகரன், தங்கமணி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வனப் பகுதியை ஒட்டி வீடு இருப்பதால் திட்டமிட்டு கொள்ளையர்கள் யாரேனும் வந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.