தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப் பெற்ற மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோவாவின் வாஸ்கோடாகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதன்படி, வாஸ்கோடாகாமாவில் இருந்து ஆக. 27, செப். 2, 6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் நள்ளிரவு வேளாங்கண்ணியை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஆக. 29, செப். 4, 8 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.