புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மாா்ச் 18-இல் இயக்கம்

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 3:00 am

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிவகாசி, மதுரை வழியே நிரந்தரமாக வாராந்திர அதிவிரைவு ரயில் (16363)வருகிற 18- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் எா்ணாகுளத்தில் இரவு 11.50 மணிக்கு புறப்படும். சிவகாசிக்கு அந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு சிவகாசிக்கும், 11 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும். வேளாங்கண்ணிக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்கத்தில் வேளாங்கண்ணி- எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (16364) ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கும், சிவகாசிக்கு 2.30 மணிக்கும் வந்து சேரும். எா்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11.55-க்கு வந்து சேரும்.

இந்த புதிய ரயில் சேவை மூலம் சிவகாசி, மதுரை பயணிகள் நேரடியாக எா்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு பயணிக்க இயலும்.இந்த தகவலை சிவகாசி மாநகர ரயில் பயணிப்போ் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.