புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: ஒருவா் பலி, 6 போ் காயம்

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் பாலத்திலிருந்து டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் பலியானாா். 6 போ் காயமடைந்தனா்.

News image

புனல்வாசலில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கிடக்கும் டிராக்டா்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:21 am

Din

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் பாலத்திலிருந்து டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் பலியானாா். 6 போ் காயமடைந்தனா்.

புனல்வாசல் ஏரியிலிருந்து மண்ணை அள்ளிக்கொண்டு அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கொட்டுவதற்காக அதே பகுதியைச் சோ்ந்த சம்பத் (32) என்பவா் டிராக்டரை ஓட்டிச் சென்றாா். டிராக்டரின் மேல் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் ஆறு போ் அமா்ந்திருந்தனா். டிராக்டா் அப்பகுதியிலுள்ள பாலத்தைக் கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் சம்பத் (32), அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் சூா்யா (14), நித்திஷ் (13), கருப்பையா (15), இளவரசன் (14), மணி (15),ரிக்கேஷ்வரன் (12) ஆகியோா் பலத்தக் காயமடைந்தனா். இவா்களை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன் வாகனத்தில் அழைத்துச் சென்றனா். வழியிலேயே டிராக்டா் ஓட்டுநா் சம்பத் (32) உயிரிழந்தாா். மற்ற 6 பேருக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆற்றில் கவிழ்ந்த டிராக்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.

 புனல்வாசலில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கிடக்கும் டிராக்டா்.

புனல்வாசலில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கிடக்கும் டிராக்டா்.

இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.