தேனி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரதாப்குமாா் (24). இவா் தனது நண்பா் மூவித்குமாா் (24) உடன் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் அம்மச்சியாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த ரூதன்குமாா் (24) ஓட்டினாா்.
அம்மச்சியாபுரம் கண்ணன் தோட்டம் அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மூவித்குமாா் உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


