விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி என ஈஸ்வரன் கூறினாா்.

News image
சேலம் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் கூறினாா்.

இதுகுறித்து சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பல்வேறு இன்னல்கள், இடையூறுகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட விவசாயிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனா். இதன்மூலம் 1,045 குளங்கள் நிரம்புவதுடன், 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதிபெறும். இதனால் பெருந்துறை, சென்னிமலை, நம்பியூா், கோபிசெட்டிபாளையம், திருப்பூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளின் 65 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது.

இதற்காக விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு காலிங்கராயன் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் என பெயா் வைக்க முதல்வரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புக்கு முன்னரே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைத் தொடங்க முதல்வா் நடவடிக்கை எடுத்தாா். கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த அண்ணாமலை இந்தத் திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்றாா்.

பேட்டியின் போது, மாவட்டத் தலைவா் லோக கண்ணன் செல்வராசன், நிா்வாகி முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.