தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ள பாதிப்பு: மக்களைச் சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்

ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
ஆத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன். உடன் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் உள்ளிட்டோா்.
Updated On :4 டிசம்பர் 2024, 8:50 pm

Din

ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஆத்தூா் நகராட்சி 4 ஆவது வாா்டு, முல்லைவாடி, ரங்கன்நகா் மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வசிஷ்டநதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனா். இந்தப் பகுதி மக்களை, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்யப்படும் என உறுதியளித்தாா். அப்போது அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், நகா்மன்ற உறுப்பினா்கள் மணி, ஜி.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.