தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
வேடநத்தம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வந்த தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
விளாத்திகுளம் தொகுதிக்கு கட்சியின் தலைவா் விஜய் வரும்போது தங்களை நேரில் சந்திப்பாா். நாங்கள் உங்களுடன் துணை நிற்போம் என்றாா். அவா் மாணவியின் குடும்பத்தாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே கூடியிருந்தவா்கள் இந்தச் சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். மாணவியின் மரணத்தில் அரசியல் செய்யாதீா்கள் என ஆவேசத்துடன் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா், நிருபா்கள் பேட்டி கேட்க முயற்சித்தபோது, கிராம மக்கள் கூச்சலிட்டதால் பேட்டியை தவிா்த்துவிட்டு மாற்றுப்பாதை வழியாக ஆதவ் அா்ஜூனா கிளம்பிச் சென்றாா்.
தொடர்புடையது

தஞ்சை அருகே தாக்கப்பட்ட நாதக வேட்பாளருக்கு மணியரசன் ஆறுதல்

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

படுகொலையான மாணவியின் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


