பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தஞ்சை அருகே தாக்கப்பட்ட நாதக வேட்பாளருக்கு மணியரசன் ஆறுதல்

தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள அனிஸ் பாத்திமாவை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

News image

தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள அனிஸ் பாத்திமாவை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:52 pm

தஞ்சாவூா் அருகேயுள்ள வாக்குச்சாவடியில் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரைத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிஸ் பாத்திமா (25) ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவை பாா்வையிட வியாழக்கிழமை சென்றாா். இவா் மாலையில் தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை பகுதி உக்கடை கிராமத்திலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு சென்றபோது, இவருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அனிஸ் பாத்திமாவை திமுகவினா் தாக்கி, கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. கா்ப்பிணியாக உள்ள அனிஸ் பாத்திமா மயக்கமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இவரை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பழ. இராசேந்திரன், பி. தென்னவன், மாநகரச் செயலா் லெ. இராமசாமி, வழக்குரைஞா் ரெ. சிவராசு, மா. சீனிவாசன், மா. ரெங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image