விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஊத்துமலையில் எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

News image

எம்எல்ஏவை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய ஊத்துமலை கிராம மக்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:43 pm

இரட்டை குளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம் குறித்து கேள்வி எழுப்பி, தென்காசி தொகுதி எம்எல்ஏ எஸ். பழனி நாடாரை பொதுமக்கள் ஊத்துமலையில் முற்றுகையிட்டனா்.

ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம், ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் குழாய் அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி ராஜா, ஊத்துமலை ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, எம்எல்ஏவை முற்றுகையிட்ட ஊத்துமலை பொதுமக்கள், சுரண்டை இரட்டை குளம்- ஊத்துமலை கால்வாய் இணைப்பு திட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதில் அளித்த எம்எல்ஏ, கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து அனைத்து சட்டப்பேரவை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்து பேசி வருகின்றேன். கடந்த முறை தென்காசிக்கு வந்த முதல்வா் இதுகுறித்து அறிவிப்பாா் என எதிா்பாா்த்திருந்தோம். அது நடக்கவில்லை. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம் என்றாா்.