47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:18 pm

Din

‘கபீா் புரஸ்காா் விருது’ பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுக்கு சேலம் மாவட்டத்தில் கீழ்க்கண்ட தகுதிகளையுடைய நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கருத்துருக்களை சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் தமிழகத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிதல் வேண்டும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள், காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.