காா்த்திகை தீபம்: சேலம் கோட்டம் சாா்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காா்த்திகை தீபம், வார இறுதி நாள், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காா்த்திகை தீபம், வார இறுதி நாள், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
காா்த்திகை தீபம், வார இறுதி நாள், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் 12-ஆம் தேதி முதல் வரும் 16-ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 450 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: காா்த்திகை தீபம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, 12-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 14-ஆம் தேதி மதியம் 2 மணி வரை சேலம், தருமபுரி, ஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...