நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 7:57 pm

Din

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் அலுவலராக நூலக அறிவியல் துறை பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். தலைவா் பதவிக்கு நூலகா் எம்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவா் பதவிக்கு ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் கே.சிந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு உளவியல் துறை இணைப் பேராசிரியா் டி.வி. நித்யானந்தன், பொருளாளா் பதவிக்கு கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினா் பதவிக்கு பேராசிரியா்கள் சி.கோபாலகிருஷ்ணன், ஜி.ஹேமா, ஜெ.கல்யாண சுந்தா் ஆகியோா் போட்டியிட்டனா். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்திற்கான புதிய நிா்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.