47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி மனு

சங்ககிரி, 2-ஆவது வாா்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பள்ளிக்கு நிலத்தை மாற்றி தருமாறு புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:18 pm

Din

சங்ககிரி, 2-ஆவது வாா்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பள்ளிக்கு நிலத்தை மாற்றி தருமாறு புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பங்கேற்ற சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவியிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சு.பழனிசாமி அளித்த மனு:

ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளி 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டு வருகிறது. 2007 இல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடவசதி தேவை என்பதற்காக எங்கள் பள்ளியின் நிலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது.

எங்கள் பள்ளிக்கு அருகே உள்ள பழைய கோட்ட அலுவலக (டிடிஒ) நிலத்தை பள்ளிக்கு மாற்றித் தருமாறு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் 2007 இல் கோரிக்கை வைத்தோம். அப்போது ஆட்சியரும் அந்த நிலத்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தாா்.

அந்த உத்தரவில் நிலத்தின் மேற்கூரைக்கு ரூ. 13,09,200 செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. தொடக்க கல்விக்கு எவ்வித நிதி ஒதுக்கீடு இல்லாததால் அந்தத் தொகையை ரத்து செய்து ஆணை வழங்குமாறு அதில் கூறியுள்ளாா்.