47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்.

News image
சங்ககிரி தீயணைப்பு அலுவலகத்தில் ஆய்வு செய்த சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. (வலது) சங்ககிரி, தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த ஆட்சியா்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:05 pm

Din

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் கீழ் சங்ககிரி வட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா்.

சங்ககிரியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த ஆட்சியா் ரா.பிருந்தா தேவி ஆய்வகம், ஸ்கேன் சென்டா், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு, கா்ப்பிணிகளுக்கான பிரசவ அறை, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா்.

மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு, சிகிச்சை முறைகளை மருத்துவா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், பின்னா் அங்கிருந்து தீயணைப்புத் துறை அலுவலகம் சென்று பராமரிப்பு பதிவேடுகள், அலுவலா்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தாா்.

சங்ககிரி 2-ஆவது வாா்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு ஆங்கில வழி கல்வியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கற்றல் திறன், அரசு சாா்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும், சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தாா். பின்னா், சங்ககிரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் விவரம், நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும் இ-பைலிங் வழக்குகள் பாா்வையிட்டாா்.

அதையடுத்து சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில்த் பராமரிக்கப்படும் அலுவலகக் கோப்புகளை பாா்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கப்படாத பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி, மருத்துவ அலுவலா் சரவணகுமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ்குமாா், 2-ஆவது வாா்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பழனிசாமி, காவல் நிலைய ஆய்வாளா் டி.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.