47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:57 pm

Din

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறியவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம், ஆத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் பலா் அதிமுகவில் இணைந்தனா். அனைவரையும் வரவேற்று எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சியின்போது கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முடக்கி வைத்துள்ளாா். ‘அம்மா’ மினி கிளினிக், ‘அம்மா’ இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், குடிமராமத்து பணி உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை முடக்கி வைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட வி.கூட்ரோடு பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா கட்டப்பட்டு பணிகள் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்தப் பூங்காவை திறக்க முதல்வருக்கு மனமில்லை.

திமுக அதன் கூட்டணி கட்சிகளையே நம்பிருக்கிறது. ஆனால், அதிமுக மக்களை நம்பியிருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் விரும்பும் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் நல்லாட்சியைக் கொண்டு வருவோம்.

இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து ஏ.கே.டி. வரதராஜன் அதிமுகவில் இணைந்துள்ளதன் மூலம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் அ.மோகன் வரவேற்றாா். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த ஏ.கே.டி.வரதராஜன், தலைமைக் கழக நிா்வாகி அமுதா ராஜசேகா் உள்பட 2,000க்கும் மேற்பட்டோா் அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். திமுக, பாமகவில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளா் ரா.குமரகுரு, எம்எல்ஏக்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), கு.சித்ரா (ஏற்காடு), அ.நல்லதம்பி(கெங்கவல்லி), ராஜா(எ)மணிமுத்து (வீரபாண்டி), மணி (ஓமலூா்), முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் நன்றி கூறினாா்.