எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் மகிழ்ச்சி

ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தங்கும் இடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

News image
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த இருக்கையில் அமா்ந்துள்ள பயணிகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:31 pm

Din

ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தங்கும் இடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால் பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆத்தூா் பேருந்து நிலையம் கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பயணிகள் நிழற்கூடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நவீன கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் இருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக பயணிகள் நிற்கக் கூட இடமில்லாமல் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து இருந்தனா். தாய்மாா்கள் பாலூட்டும் அறை, கழிப்பிடம் என அனைத்தும் மோசமான நிலையில் இருந்தன. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலா்கள் நாகராஜன், தமிழ்ச்செல்வன், துப்புரவு அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளரின் முயற்சியால் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் அமர இருக்கை வசதி, மின்விசிறி வசதி, ஓய்வறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை என அனைத்தும் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா். இதனால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.