சேலம் வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்
கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலம்: கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
புத்தாண்டை முன்னிட்டு முக்கிய வழித்தடங்களில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல், மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹூப்ளி- கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜனவரி 6, 13 ஆம் தேதிகளில் (திங்கள்தோறும்) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, பிரூா், தும்கூா், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா் வழியாக அடுத்த நாள் பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், கன்னியாகுமரி-ஹூப்ளி சிறப்பு ரயில் டிச.31, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) இயக்கப்படுகிறது. சுன்னியாகுமரியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் இரவு 7.35 மணிக்குச் சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...