சிறப்பு ரயில் | train
ரயில்கோப்புப் படம்

கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து பிப்ரவரி 5,12, 19 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து பிப்ரவரி 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் ( எண்: 16182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், வாசிம், அகோலா, நந்தூா்பூா், வதோதரா, கோத்ரா, அஜ்மீா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com