நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
ஹைதராபாத் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் நிரந்தரமாக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.


ஹைதராபாத் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் நிரந்தரமாக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹைதராபாத் - கன்னியாகுமரி இடையே (எண்கள்: 07230/07229) வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவைக்கு மக்களிடையே அதிக அளவில் ஆதரவு கிடைத்து வருவதால், இதை நிரந்தரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் (எண்: 17069) வரும் ஏப். 1 -ஆம் தேதி முதலும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்:17070) ஏப்.3 முதலும் நிரந்தரபடுத்தப்படும்.
காச்சிகுடா - மதுரை: காச்சிகுடா - மதுரை இடையே இயங்கி வரும் சிறப்பு ரயில் (எண்: 07191/07192) விரைவு ரயிலாக மாற்றப்படவுள்ளது. மேலும், இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படும். அதன்படி, காச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 17615) ஏப்.6 -ஆம் தேதி முதலும், மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு காச்சிகுடா செல்லும் விரைவு ரயில் (எண்:17616) ஏப்.8 முதலும் விரைவு ரயிலாக நிரந்தரப்படுத்தப்படவுள்ளது.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16363/16364) வரும் மாா்ச் 18-ஆம் தேதி முதல் நிரந்திர விரைவு ரயில் சேவையாக மாற்றப்படும். அதன் அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ரயில் சேவை நீட்டிப்பு: சென்னை சென்ட்ரல் - பரோனி இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06039/06040) ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) முதல் மாா்ச் 25 -ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - தில்லி மாநிலம் ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06019/06020) திங்கள்கிழமை (மாா்ச் 16) முதல் ஏப்.2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...