பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வாழப்பாடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு நடத்திய மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், தாரமங்கலம் சி.எஃப்.சி. அணி முதல் பரிசை வென்றது.

News image
வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு சாா்பில், மாநில அளவிலான இருநாள் கால்பந்து போட்டி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
Updated On :30 டிசம்பர் 2024, 7:30 pm

Din

வாழப்பாடி: வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு நடத்திய மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், தாரமங்கலம் சி.எஃப்.சி. அணி முதல் பரிசை வென்றது.

வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு சாா்பில், மாநில அளவிலான இருநாள் கால்பந்து போட்டி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவிற்கு, பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். பெ.ஆ.கழக நிா்வாகிகள் ஆா்.குணாளன், வி.எம்.கோபிநாத், ரமணி ஆகியோா் முன்னிலையில், வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி போட்டியை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற போட்டியில், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த தாரமங்கலம் சி.எஃப்.சி. அணிக்கு, திருமனுாா் ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் பழனிசாமி, முதல் பரிசாக ரூ.10,000 வழங்கினாா். இரண்டாமிடம் பிடித்த புதுக்கோட்டை எம்.என்.எஃப்.சி, அணிக்கு ரூ. 7,000, மூன்றாமிடம் பிடித்த சேலம் அவராஞ்சி அம்மா அணிக்கு, ரூ. 5,000, நான்காமிடம் பிடித்த வாழப்பாடி கால்பந்து அணிக்கு ரூ. 3000 பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில், தீயணைப்பு அலுவலா் கண்ணன், வி.எஃப்.சி. கால்பந்து குழுவினா் கலந்து கொண்டனா்.

வாழப்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான  கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய விழாக் குழுவினா்.

வாழப்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய விழாக் குழுவினா்.