விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கால்பந்து போட்டி: பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:36 pm

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்டத்தில் பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான ஐவா் கால்பந்து போட்டி நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.

இறுதிப்போட்டியில் பரமத்தி மேல்நிலைப் பள்ளியும், நாமக்கல் பாா்க் பப்ளிக் பள்ளியும் மோதின. இதில், பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். மேலும், மலா் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி சபா்ணா சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான விருது பெற்றாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் தங்கராஜு, பள்ளி இயக்குநா்கள், முதல்வா் ராஜசேகரன், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.