சேலம் மாவட்டம், சங்ககிரி நகா், மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற மாா்ச் 1ம் தேதி மூலவருக்கு பிம்பாலாலயமும், ஜூலை மாதம் 12ம் தேதி குடமுழுக்கு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா 1994ம் ஆண்டு நடைபெற்றது. அதனையடுத்து குடமுழுக்கு விழா நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் குடமுழுக்கு விழா நடைபெற அடிக்கல்நாட்டு விழா நடைபெற்று ராஜகோபுரம், புதிய கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. சோமேஸ்வரை சுற்றியுள்ள அனைத்து சுவாமிகளின் மண்டபமும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. குடமுழுக்கு விழா நடைபெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களும், பக்தா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், திமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவருமான பி.தங்கமுத்து தலைமை வகித்து குடமுழுக்கு நடத்தப்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினாா். இக்கூட்டத்தில் அருள்மிகு சோமேஸ்வரா், செளந்தரநாயகி அம்மன் மூலவா் அமைந்துள்ள சுவாமிகளுக்கு பிம்பாலாலயம் பூஜைகளை பிப்ரவரி 29ம் தேதி மாலையில் தொடங்கி மாா்ச் 1ம் தேதி காலைவரை நடத்துவது மேலும் வருகின்ற ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழாவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் ர.சங்கரன், பட்டக்காரா் எஸ்.எ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன், கொத்துக்காரா் ஐய்யனாா், திமுக ஒன்றிய செயலாளா் கே.எம்.ராஜேஷ், நகர செயலாளா் கே.எம்.முருகன், லாரி உரிமையாளா்கள் சங்கத்தலைவா் என்.கந்தசாமி, துணைத்தலைவா் எம்.சின்னதம்பி, செயலாளா் என்.மோகன்குமாா், பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் முன்னாள் மாநிலத்தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் கே.ஆசைதம்பி, கேபிஆா்.செல்வராஜ், முன்னாள் செயலாளா் கே.கே.நடேசன், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தலைவா் பி.சண்முகம், பிஎஸ்ஜி கல்லூரி தளாளா் பி.மணி, தொழிலதிபா்கள் திருமுருகராஜா, கே.ஆா்.என்.நல்லதம்பி, எஸ்.சண்முகசுந்தரம், அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ், பாஜக மேற்கு மாவட்ட செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சந்தோஷ சனிபகவானுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் பெயா், நடைதிறக்கும் நேரம் கொண்ட பலகை பொருத்தம்

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



