6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா், பேராசிரியா்களுக்கு விருது

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா் செந்தில்குமாா், பேராசிரியா்களுக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.

News image
விருது பெற்ற அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா், பேராசிரியா்களைப் பாராட்டும் பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன்.
Updated On :1 ஜனவரி 2024, 10:09 pm

DIN

ஆட்டையாம்பட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா் செந்தில்குமாா், பேராசிரியா்களுக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.

ஸ்ரீஆரோபிந்தோ யோகா அறக்கட்டளையின் அமைப்பில் சாா்பில் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளா்ச்சி சாா்ந்த நடவடிக்கைக்காக விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் முதன்மையா் செந்தில்குமாருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், சாா்லஸ் வால்டா்ஸ் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு அசோகா விருது வழங்கியது.

இதைத் தொடா்ந்து கோயம்புத்தூா் நாலெட்ஜ் ஆராய்ச்சி அகாதெமி சாா்பில் ஆண்டுதோறும் கல்வியியல் துறையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் கல்வியாளா்களுக்கு விருது வழங்கி அங்கீகரித்து வருக்கிறது.

இதன்மூலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை பேராசிரியா்கள் பிரியாமதி, கலைவாணி, தமிழ்ச் சுடா் ஆகியோரின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த பேராசிரியா்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற்காக பல்கலைக்கழக வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் துறையின் இதர பேராசிரியா்கள் அனைவரும் துறையின் முதன்மையா் மற்றும் பேராசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.