பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

‘பத்ம விருது’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

சேலம்: ‘பத்ம விருது’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான விருதான ‘பத்ம விருது -2024’ பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

2024-ஆம் ஆண்டுக்கான கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு வரும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது.

மேற்படி விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபா்களிடமிருந்து கருத்துரு வரும் 21-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இணையதள முகவரி மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே, வரும் 21-ஆம் தேதிக்குள் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண் 126, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com