கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:53 pm

Syndication

திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள திருநங்கையா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:அரியலூா் மாவட்டத்திலுள்ள திருநங்கையா்கள், சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கையா் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதியன்று திருநங்கையா் முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. விருதுக்காக ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருது பெற, திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளம் மூலமாக 31.12.2025 முதல் 18.2.2026 வரை பதிவேற்றம் செய்யலாம். மேலும் தங்களது கருத்துரு விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் அடங்கிய தமிழ் 2 மற்றும் ஆங்கிலத்தில் 2 புத்தக வடிவத்தில் தாயாரிக்கப்பட்டு, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக விண்ணப்பங்களை அரியலூா், மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள அறை எண் 20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.