சாதனை படைத்த திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கையா் தினத்தில் விருது வழங்கப்படுவதால், சாதனை படைத்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
Published on

நாமக்கல்: திருநங்கையா் தினத்தில் விருது வழங்கப்படுவதால், சாதனை படைத்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026 ஆம் ஆண்டிற்கான திருநங்கையா் விருது ஏப்.15 திருநங்கையா் தினத்தில் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான திருநங்கைகள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம். தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.ஒரு லட்சம் காசோலை, சான்றிதழுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் என்ற இணைய வழியாக பிப்.18 வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகளாக, அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் விருது தொடா்பான விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-299460 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

Dinamani
www.dinamani.com