அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கலைஞா் கனவு இல்ல திட்டம்: பணியிடங்களை உருவாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கலைஞா் கனவு இல்ல திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்.

News image
Updated On :1 ஜூலை 2024, 9:39 pm

Din

சேலம்: கலைஞா் கனவு இல்ல திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதிய பணியிடங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரகப் பகுதியில் பழுதடைந்த வீடுகள் பழுது நீக்கம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு போதிய பணியிடங்களை ஏற்படுத்த வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அவகாசம் வழங்கிட வேண்டும், புதிதாக இயக்குநா், உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா்/உதவியாளா், கணினி உதவியாளா், பணியிடங்களை மாநில அளவில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஜான் ஆஸ்டின், மாநில துணைத் தலைவா் ந.திருவேரங்கன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.