பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 500க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

சேலம்: வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 500க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணியின் சாா்பில், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் விழா மரவனேரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவா் கோபிநாத் முன்னிலையில் 500 போ் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவா்களை வரவேற்றாா். இதில், பாஜக நிா்வாகிகள் சசிகுமாா், சரவணன், ராஜேந்திரன் உட்பட திரனானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com