ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று தில்லியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தாவும், சந்தீப் பதக்கும் தாங்கள் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்சியை விட்டு விலகி, ஒரு தனிப் பிரிவாக பாஜகவில் இணைவார்கள் என்றும் சத்தா கூறினார்.
கட்சியை விட்டு விலகிய ஏழு பேரில் சுவாதி மாலிவாலும், ஹர்பஜன் சிங்கும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நெதர்லாந்து மற்றும் பின்லாந்துக்கு ஒரு வார கால பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை பஞ்சாப் திரும்பினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த எம்.பி.க்களை கடுமையாகச் சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்கு எம்.பி.க்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் இருக்கிறார்கள், தொடர்ந்து கட்சியுடன் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். கட்சி என்பது ஒரு தனிநபரை விடப் பெரியது, வெளியேறிய 6-7 பேர் மட்டுமே பஞ்சாப் ஆகிவிடமாட்டார்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Punjab Chief Minister Bhagwant Mann on Friday dubbed AAP's Rajya Sabha members, who quit the party and announced joining the BJP, as "gaddars" (traitors).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!

மது போதையில் பேரவைக்கு வந்து ஜனநாயகத்தை அவமதித்துவிட்டார் பஞ்சாப் முதல்வர்: சச்தேவா சாடல்!

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் நம்பிக்கை கோரும் தீா்மானம் வெற்றி!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking




