வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

News image

பஞ்சாப் கிங்ஸ் அணியினர் - AP

Updated On :20 ஏப்ரல் 2026, 9:34 am

ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத முதல் அணியாக பஞ்சாப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் 29-ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் லக்னௌ அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று (ஏப். 19) இமாலய வெற்றி பெற்றது.  

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்களைக் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இதுவே அதிக ரன்களாகும்.

அடுத்து இமாலய இலக்கை விரட்டிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் திரட்டி தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் முதல் 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்திக்காத அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர், இதே பஞ்சாப் (2014) மற்றும் கொல்கத்தா (2013) அணிகள் முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்காத நிலையில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, முந்தைய போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை தோற்கடித்த பஞ்சாப் அணி, மும்பைக்கு எதிராக அங்கு ஆடிய 11 போட்டிகளில் 6 முறை வெற்றிபெற்றுள்ளது.

முன்னதாக சென்னை, பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான 13 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றிருந்த நிலையில் அதை பஞ்சாப் முறியடித்தது.

அதுமட்டுமின்றி மும்பை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் (35 போட்டிகளில் 18 வெற்றி) பெற்ற அணியாக சென்னை அணியின் ( 39 போட்டிகளில் 18 வெற்றி) வெற்றிக் கணக்கை சமன் செய்துள்ளது.

Summary

A New Record for Punjab Kings!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.