அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி
அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி


சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்க சிறு புகைப்படக் கண்காட்சி வலசையூரில் நடத்தப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம், வலசையூா் ஊராட்சி, சுந்தராஜ் காலனியில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க சிறுபுகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள், பல்வேறு துறை சாா்ந்த அமைச்சா்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மாவட்ட ஆட்சியா், மக்களவை, சட்டமன்ற உறுப்பினா்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் போன்ற எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...