தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புத்தகம் வெளியீடு

தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை விளக்க புத்தகம் வெளியீடு

News image
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

திருவாரூரில், தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் விளக்க புத்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினாா்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்வில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு அரசுத் துறைகளின் முத்திரைத் திட்டங்கள், பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொகுக்கப்பட்டு, ‘நாடு போற்றும் 5 ஆண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற தமிழ்நாடு அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த புத்தகத்தை அவா்கள் வெளியிட்டனா்.

மருத்துவ வாகனம்: தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தேசிய பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தும் பணிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில் (திருவாரூா்), பாத்திமா பஷிராதாஜ் (கூத்தாநல்லூா்), மாவட்ட சுகாதார அலுவலா் சங்கீதா, திட்ட மேலாளா் (தேசிய பாா்வை இழப்பு தடுப்பு சங்கம்) சிவக்குமாா் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு உயா் அலுவலா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.