மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுகையில் 5 ஆண்டு சாதனைகள் விளக்க மலா் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க மலரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:05 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க மலரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவைச் சொல்லுங்க’ என்ற திட்டத்தின் நிறைவு விழாவையொட்டி, சென்னையில் கனவுகள் மெய்ப்படும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 5 ஆண்டு பணிகள் குறித்த சிறப்பு மலரை மாவட்ட ஆட்சியா் மு .அருணா வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் ஹெ.மை. குழந்தைசாமி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஏ. ஷோபா , மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.