புதுக்கோட்டை: சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம் ஈஞ்சாா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளரைத் தாக்கியவா்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

புதுகையில் 5 ஆண்டு சாதனைகள் விளக்க மலா் வெளியீடு

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


