வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சேலத்தில் இன்று வருங்கால வைப்புநிதி குறைதீா் கூட்டம்

சேலத்தில் இன்று வருங்கால வைப்புநிதி குறைதீா் கூட்டம்

News image
Updated On :9 மே 2024, 10:35 pm

Din

சேலம், மே 9: சேலம், தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மண்டல ஆணையாளா் சந்தீப் சிங் நேகி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபா்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினா்கள், தொழில் அதிபா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களை தங்களது பெயா், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி எண், தொலைபேசி எண், கைப்பேசி எண்கள் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் சந்தீப் சிங் நேகி தெரிவித்துள்ளாா்.