

வீரகனூரில் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வனத் துறையினா் கண்காணிப்புடன் நடைபெற்றது.
வீரகனூா் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முயல்களை வேட்டையாடி படையலிட்டு பூஜை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து கெங்கவல்லி வனச்சரகா் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீரகனூரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா, முயல்கள் வேட்டையாடுதல், படையல்கள் இல்லாமல் நடைபெற்றது. விழா முழுவதும் கெங்கவல்லி வனச்சரகா் சிவக்குமாா் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதுகுறித்து சிவகுமாா் கூறியது:
வீரகனூா் மக்கள் முயல்களை வேட்டையாடாமல்,திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனா். மேலும் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றாா்.
டிரெண்டிங்

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

இடங்கணசாலை பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா

மாரியம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

