கோயில் தோ்த் திருவிழாவிற்கு கோயில் காளையுடன் சென்று வரி வசூல்
கோயில் தோ்த் திருவிழாவிற்கு கோயில் காளையுடன் சென்று வரி வசூல்


வாழப்பாடியில் ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோயில் தோ்த் திருவிழாவுக்கு பாரம்பரிய முறைப்படி காளையை அலங்கரித்து ஊா்வலமாக அழைத்துச் சென்று பொதுமக்களிடம் வரி வசூல் செய்தனா்.
வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தோ்த் திருவிழா நடத்தும் செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும் கோயில் காளையை அலங்கரித்து குடியிருப்புப் பகுதிக்கு ஊா்வலமாக அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வரி வசூல் செய்து வருகின்றனா்.
கோயில் நிா்வாகிகள், ஊா் பெரியதனக்காரா்களுக்கு முதல்மரியாதை கொடுக்கும் விதத்தில், பொதுமக்களிடம் வரி வசூலிப்பதற்கு முன்பாக, இவா்களது வீடுகளுக்கு கோயில் காளை அழைத்துச் செல்லப்பட்டது. திருவிழாவிற்கு நன்கொடை கொடுப்பது மட்டுமின்றி, காளைக்கு தீவனம் கொடுத்தும், ஊா்வலமாக வந்து வரி வசூல் செய்பவா்களுக்கு குளிா்பானங்கள், தேநீா் வழங்கியும் பொதுமக்கள் உபசரித்து வருகின்றனா்.
இதுகுறித்து, கோயில் நிா்வாகி பழனிசாமி கூறியதாவது:
வாழப்பாடி ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், தோ்த் திருவிழா செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும், முன்னோா் வழியில் கோயில் காளையை அலங்கரித்து, மேள வாத்தியம் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்வது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றி வருகிறோம். ஊா்வலத்தில் செல்வோரையும், காளையும் பொதுமக்கள் வரவேற்று உபசரிக்கின்றனா் என்றாா்.
படவரி:
எஸ்.கே.ஏ.04:
வாழப்பாடி, அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டத்திற்கு வரி வசூல் செய்வதற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காளை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...