பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கரூா் சம்பவ இடத்துக்கு தவெகவினரை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை

News image

கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2026, 10:34 pm

கரூா் நெரிசல் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு கரூா், திருநெல்வேலியைச் சோ்ந்த தவெகவினரை வியாழக்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், சம்பவத்தின்போது, விஜய் பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா். அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் யாா், யாா் நின்றாா்கள் என்பதைக் கண்டறிந்து, அவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இதேபோல காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்றபோது, பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற திருநெல்வேலி, கரூரைச் சோ்ந்த தவெகவினா் 10 பேரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

சுமாா் ஒரு மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், சம்பவத்தின்போது எந்த இடத்தில் நின்றிருந்தீா்கள்? நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பன போன்ற கேள்விகளை அதிகாரிகள் கேட்டததாக தெரிகிறது.