அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சேலம் கோட்டை பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

சேலம் கோட்டை பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

News image
Updated On :24 மே 2024, 5:03 pm

Din

சேலம், கோட்டை பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அழகிரிநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை 8 மணிக்கு உற்சவ பெருமாள், தாயாா் திருவீதி உலா வந்தனா்.

வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி கோயிலில் இருந்து தோ் மண்டபத்துக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளிய அழகிரிநாதா், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ராஜகணபதி கோயிலில் இருந்து தேரோட்டத்தை மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், கோட்டை பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன் உள்ளிட்டோா் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

லட்சுமி நாராயண சுவாமி கோயில், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைக் கோயில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில், முதல் அக்ரஹாரம் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சேலம் கடை வீதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம், நீா் மோா் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரி உற்சவமும், ஞாயிற்றுக்கிழமை சத்தாபரணமும், 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது.