தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி அருகே குப்பை சுத்திகரிப்பு நிலையம்: பெற்றோா் தா்னா

சேலம், வீராணம் அருகே பள்ளி அருகில் குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதைக் கண்டித்து மாணவ மாணவிகள் பெற்றோருடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:02 pm

Din

சேலம், வீராணம் அருகே பள்ளி அருகில் குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதைக் கண்டித்து மாணவ மாணவிகள் பெற்றோருடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், அம்மாபேட்டை அருகே வீராணம், பெருமானூா் காட்டுவளவு பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் அருகே குப்பை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதைக் கண்டித்தும், குப்பை சுத்திகரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தியும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அவா்களது பெற்றோருடன் புதன்கிழமை பள்ளி முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த வீராணம் போலீஸாா், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பெற்றோரை சமாதானப்படுத்தினா். குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, பெற்றோா் தா்னாவை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா் மாணவ மாணவிகள் பள்ளிக்குத் திரும்பினா். இந்த திடீா் தா்னாவால் வீராணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.