கோவில்பட்டி, புதுரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 86-ஆவது விளையாட்டு விழா, சாரண, சாரணியா் இயக்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், தொடா் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கபடி, கோகோ உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கும் இசை நாற்காலி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற ஆசிரியா்களுக்கும் பெற்றோா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ரோட்டரி கிளப் தலைவா் ராஜ்குமாா், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் சுப்பாராயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டி பேசினா்.
விழாவில், மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை ஆசிரியை பொன்மலா் பாரதி தொகுத்து வழங்கினாா். பட்டதாரி ஆசிரியை மீனா வரவேற்றாா். முத்துலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


